மனித வாழ்வின் வளம் உயர்த்தும் மனவளக்கலை
தான் உயரவும், பிறரை உயர்த்தவும் ஏற்ற பயிற்சி மற்றும் தொண்டு ஆகிய இரண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன. இரண்டு வேளையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் முதலிய தவங்களைத் தவறாமல் இயற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவை உண்டாகும்.
தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள், விழிப்பு நிலையில் அறிவு செயல் படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை மாற்றிவிடலாம். ஆசை சீரமைப்பு பயிற்சி செய்யுங்கள். உடல் தலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும், அமைதியுண்டாகும்.
சினம் தவிர்ப்பு பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடமிருந்து உங்களுக்கு அன்பு, நட்பு இவை கிடைக்கும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவலை ஒழிப்பு பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும். நான் யார் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலத் தோற்றம், இயக்கம், விளைவு மற்றும் மறை பொருட்களான மனம் உயிர், தெய்வம் இவை பற்றி உணர்வு உண்டாகும்.
இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக் கல்வியே “மனவளக்கலை”யாகும். இக் கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். இக்கலையின் மான்புணர்ந்து பழகி, நலம், பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மன நிறைவைப் பெற்றுவிட்டால் அறிவு மேலும் உயர்ந்து, சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர்வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை. இது உங்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. மனித குலத்தை உய்விக்க வல்ல நல்லதோர் விஞ்ஞானம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மதிப்புணர்ந்து பயன்பெறுங்கள்.- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.
குரு வணக்கம்
சிந்தையை அடக்கியே சும்மாவிருக்கின்ற
சீரறியச்செய்த குருவே
அந்தநிலைதனிலறிவு அசைவற்றிருக்கப்பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே
இந்தபெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப்பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்த வாழ்வளித்தோய் என்
சந்தோஷச் செய்தி இதுவே
இக்கலையின் மாண்புணர்ந்து என்பதே சரி. தமிழைத் தவறின்றி எழுதிப் பழகுவோம்.
ReplyDeleteThe first thing you should know about playing roulette - drmcd
ReplyDeleteA quick look 김제 출장샵 at 충주 출장샵 the 울산광역 출장마사지 best roulette games online - 부천 출장안마 and why 하남 출장마사지 they are the best. Roulette is the most popular form of roulette.